• Wed. Apr 23rd, 2025

ஐயப்ப சுவாமிக்கு சித்திரை விசு கனி பூஜை..,

ByKalamegam Viswanathan

Apr 14, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் சித்திரை மாத பிறப்பை முன்னி ஐயப்ப சாமிக்கு சித்திரை விசுக்கனி பூஜை நடைபெற்றது.

இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஒம் ஸ்ரீ பிரம்ம காளி பந்தளவேந்தன் ஐயப்ப பக்தர்கள் குழு மற்றும் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள ஐயப்பசாமிக்கு ஓம் ஸ்ரீ வில்லாளி வீரன் ஐயப்ப பஜனை சேவா சங்கம் சார்பில் பூஜை நடைபெற்றது. இரவு 8 மணியளவில் உற்சவர் ஐயப்ப சாமிக்கு அஷ்டபிஷேகங்கள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து திவ்ய நாம சங்கீர்த்தன பஜனை நடைபெற்றது. பின்னர் ஐயப்ப சுவாமிக்கு பழ வகை அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.