



விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டு வரும் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்பில் 338 வது ஆண்டு வெண்குடை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஏழு தெருக்கள் வழியாக வெண்குடை திருவிழா, கரகாட்டம், ஒயிலாட்டம், ஆலியாட்டம், பொய்க்கால் குதிரை போன்றவை மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மருளாடி புலியூர் சித்தன் வெண்குடையை கையில் ஏந்தி படி பத்தினி தெய்வத்தின் திருமாங்கல்யம், கால் சிலம்பு போன்றவைகளுடன் சாமி மருளாடி வந்தார்.


ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள் சூழ வண்ணப் பதாகைகள், வெண் கொற்றக் குடைகளுடன் ஏராளமானோர் பின் தொடர்ந்து வந்தனர். ஏழு தெருக்கள் சுற்றி முடித்து முடங்கியர் சாலை வழியாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு நீர் காத்த அய்யனார் சுவாமி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் அருள்மிகு நீர் காத்த அய்யனார் கோவிலில் இருந்து தீர்த்தக் குடங்களுடன் மீண்டும் ஊர்வலமாக வந்து இரவில் தெருவை வந்தடைந்தனர்.
பாதுகாப்பு ஏற்பட்டதுகளை விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையில் ராஜபாளையம் பொறுப்பு டிஎஸ்பி ராஜா வேர்பார்வையில் 3 ஏ டி எஸ் பி ,8டிஎஸ்பி , 25 இன்ஸ்பெக்டர்கள் 149 சார் ஆய்வாளர்கள் என 1111 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விழாவில் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

