• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

புயல் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு

ByA.Tamilselvan

Dec 10, 2022

புயல் பாதிக்கப்பட்ட சென்னை மாநகர்,புறநகர் பகுதியில் முதலமைச்சர் மு.ஸ்டாலின் ,ஆமைச்சர்கள் ஆய்வு.மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிறைய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
இதனால் சென்னை மாநகர், புறநகர் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்பு, சேதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார். அங்கு, சீரமைப்பு மற்றும் நிவாரண பணி குறித்து முதல்வரிடம் அமைச்சர் எடுத்துரைத்தார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.