• Sat. May 25th, 2024

கோஷ்டிப் பூசலில் சிக்கித் தவிக்கும் திமுக – கடுப்பில் முதல்வர்…

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் மாதேஸ்வரன் மலையில் கோவிலுக்கு சென்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் தனது ஆதரவாளர்கள் 100 பேருக்கும் மேற்பட்டோருடன் மாதேஸ்வரன் மலைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு தமிழக அரசு நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு தேர் இழுத்ததாக சொல்லி வந்தனர். ஆனால் தமிழக முதல்வர் சேலம் வந்து சென்றதிலிருந்து அவருடைய செயல்பாடுகள் மிகவும் தொய்வு ஏற்ப்பட்டது. காரணம் என்னவென்று விசாரித்த போது, கடந்த மாதம் தமிழக முதல்வர் சேலம், தர்மபுரி என இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்தார். அப்பொழுது ஒரு நட்சத்திர விடுதியில் இரவு தங்கி இருந்தார் தமிழக முதல்வர். அன்று எம்.பி, எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர்கள் என முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசியுள்ளார்.

இதில் தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவருடைய உறவினரான பாரப்பட்டி சுரேஷ் தேர்தலில் நிற்க, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் எஸ்.ஆர்.பார்த்திபன் வேட்பாளர் பெயரை முன்னிறுத்தி வந்தனர். இதனை அறிந்து கொண்டு தமிழக முதல்வர் இரண்டு பேரையும் நன்றாக கவனித்துள்ளார். என்னையே ஏன் ஏமாற்றினார்கள் என கேட்டுள்ளார். பனமரத்துப்பட்டி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தல் ஏன் வந்தது இதில் யார் முன்னால் நின்றார்கள் என கேட்டதற்கு, உடன் பிறந்த அண்ணன் பாரப்பட்டி குமார் கொரானா நோயால் இறந்துவிட்டார். அதன் காரணத்தினால் தம்பி பாரப்பட்டி சுரேஷ் போட்டியிட்டார். அதே இடத்தில் பாரப்பட்டி குமார் மனைவியும் திமுக சார்பில் சீட் கேட்டு கிடைக்காத காரணத்தால் சுயேச்சையாக நின்று தோற்க்கடிப்பட்டார். சுரேஷ் அந்த இடத்திற்கு நின்று வெற்றியும் பெற்றுள்ளார்.

தமிழக முதல்வர் அவர்கள் எம்பி, எம்எல்ஏ, முக்கிய நிர்வாகிகளை அழைத்து, இங்கு பல அரசியல் சூழ்ச்சிகள் நடந்து வருகிறது. ஒழுங்காக கட்சி வேலையை பாருங்கள் இல்லையென்றால் சென்று விடுங்கள் என மிரட்டி அனுப்பி உள்ளார்.

சேலத்தில் திமுக ஏழு கோஷ்டியாக இருந்து வருகிறார்கள். இது திமுகவில் SR பார்த்திபன் தனி அணியாகவும், மாநகர மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான இராஜேந்தின் தனி அணியாகவும், கிழக்கு மாவட்ட செயலாளர் SR சிவலிங்கம் தனி அணியாகவும், மேற்கு மாவட்ட செயலாளர் TM செல்வகணபதி தனி அணியாகவும், வீரபாண்டி மறைந்த ராஜா அவர்கள் தனி அணி, வீரபாண்டி பிரபு தனி அணியாகவும், பாரப்பட்டி சுரேஷ் தனி அணியாகவும் உள்ளனர்.

எனவே கோஷ்டி பூசலும் சேலம் திமுகவில் அதிகமாக உள்ளது. இதில் மாநகர மாவட்ட செயலாளர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களை எதிர்த்து காய் நகர்த்த வேண்டும் என அதிகமாக விளம்பரம் செய்து போட்டி போட்டுக் கொண்டு வந்து கொண்டுள்ளார் எஸ் ஆர் பார்த்திபன். தமிழக முதல்வர் எஸ் ஆர் பார்த்திபன் அவர்களை இறுதிகட்டமாக விசாரித்தபோது நீங்கள் பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரை என்ன பணிகள் மாவட்டத்திற்கு செய்து உள்ளீர்கள் என எனக்கு ஒரு அறிக்கை இரு தினங்களுக்குள் நேரில் வந்து காட்ட வேண்டும் என மிரட்டி அனுப்பியுள்ளார்.

உடனே எம்பி அவர்கள் ஐந்து தினங்களுக்கு முன் மூன்று ஆல்பங்கள் தயார் செய்து தாம் என்னென்ன பணிகள் செய்தோம் என அத்தனையும் தயார் செய்து சென்னை சென்று தமிழக முதல்வரை நேரில் பார்த்து அனைத்தையும் தந்து விட்டு வந்துள்ளார். பிறகு சேலம் வந்ததிலிருந்து அவர் எந்த நிகழ்ச்சிக்கும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்து வந்தார். பிறகு தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்குச் சென்று வந்துள்ளார். ஆனால் அவர் மனதில் ஏதோ ஒரு திட்டம் உள்ளது, அது என்னவென்று விரைவில் தெரியவரும் என வரை சுற்றி இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே 11 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட சேலத்தில் ஒரே ஒரு சட்டமன்ற தொகுதியை மட்டுமே திமுக வென்றது. அதேபோல் இந்த தேர்தலிலும் ஒரே ஒரு திமுக எம்எல்ஏ மற்ற 10 தொகுதியில் அதிமுக வென்றுள்ளது. இதனால் தமிழக முதல்வர் மிகவும் உச்ச கோபத்தில் உள்ளார்.

இந்தநிலையில், மறைந்த வீரபாண்டி ராஜா அவர்களின் ஆதரவாளர்கள் மிகவும் மனவேதனையில் உள்ளார்கள். மேலும் ‘கோஷ்டிப் பூசலில் சிக்கித் தவிக்கும் திமுகவை, தமிழக முதல்வர் சீர்செய்வாரா, ஏனென்றால் மீண்டும் தமிழகத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், சேலம் மாநகராட்சி அதிமுக கைப்பற்றி ஆகவேண்டுமென எடப்படியார் ஒரு முடிவோடு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *