கடையநல்லூரில் சுவாமி சிலைகளை உடைத்த கிருஷ்ணாபுரம் சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள, அருள்மிகு எல்லைக் காளியம்மன் கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி
கடையநல்லூர் நகர இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஜெயகுமார், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் மற்றும் கடையநல்லூர் ஒன்றிய தலைவர் தர்மர், மாவட்ட செயலாளர் ராமநாதன், நகரச் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.