செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள் கால்பந்துவிளையாடி மகிழ்ந்தனர்.மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் செஸ் விரர்களுக்கு இன்று ஓய்வளிக்கப்பட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சென்னை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார்.