• Tue. Dec 10th, 2024

காமன்வெல்த் போட்டியில் குத்து சண்டை பிரிவில் இந்தியாவிற்கு பதக்கம்…

Byகாயத்ரி

Aug 5, 2022

காமன்வெல்த்தில் இந்தியா மற்றொரு பதக்கம் வெல்வதை உறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டி நடக்கிறது.

இதில், 51 கிலோ குத்து சண்டை பிரிவிற்கான போட்டியில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த அமித் பங்கல் என்னும் வீரர் பதக்கம் வெல்வதை உறுதி செய்திருக்கிறார். அமித் பங்கல், ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த லெனன் முல்லிகன் என்னும் வீரருடன் போட்டியிட்டார். இதில், அமித் 5-0 என்ற கணக்கில் புள்ளிகளை பெற்று முல்லிகனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு சென்றுள்ளார்.