சென்னை – திருப்பதி இடையே அதிவேக ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சென்னை-திருப்பதி இடையே கொரோனாவுக்கு முன்பு வரை மின்சார ரெயில் சேவை இருந்து வந்தது. கொரோனா ஊரடங்கின் போது இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சென்னை-திருப்பதி ரெயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரெயில் (06727) நீட்டிப்பு செய்யப்பட்டு சென்னை-திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத விரைவு ரெயிலாக கடந்த 13-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிவேக ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது. சென்னை-திருப்பதி அதிவேக ரெயிலுக்கான சோதனை ஓட்டம் நடை பெற்றது.