


பொள்ளாச்சி அருகே உள்ள திம்மங்குத்து கிராமத்தில், கடந்த 2018ம் வருடம் டெண்டர் கோக்னட் பேங்கிங் யூனிட் என்ற பெயரில் விண்ணப்பித்து முறைகேடாக அனுமதி பெற்றுள்ளனர். கடந்த 25ம் தேதி நிறுவனத்தின் அருகில் உள்ள பிஏபி வாய்க்காலில் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குழாய் மூலம் வெளியேற்றபடுகிறது, இதனால் வாய்காலில் துர்நாற்றம் ஏற்பட்டு விவசாயித்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மேலும் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றுநீர்ரை உறிஞ்சு குளிர்பானங்கள் தயாரிக்கின்றனர் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இதில் மண்ணுர் விவசாயிகள்/ ஆழியார் புதிய ஆயக்கட்டு விவசாயிகள் நலச்சங்கம் விவசாயிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சார் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

