தென்காசி மாவட்டம் புளியங்குடியில், சுகாதாரத் துறையின் மூலமாக மாணவ மாணவியருக்கு நேற்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது! அதில் புளியங்குடி தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவன் குருவேல் (15) இவர் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை! இந்நிலையில், நேற்று இவர் படிக்கும் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது!
தடுப்பூசி போட்ட மாணவர்களுக்கு அவர்கள் கொடுத்த செல்போன் எண்களுக்கு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அனுப்பப்பட்டது, அதேபோல், குருவேல் தடுப்பு ஊசி போட்டதாக, அவரது தந்தைக்கும் சான்றிதழ் வந்ததால் குருவேலின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்!