• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சமுத்திரக்கனியின் ‘பப்ளிக்’; ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சமுத்திரக்கனி நடித்துள்ள ‘பப்ளிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெங்கட் பிரபுவும் நடிகர் விஜய் சேதுபதியும் இன்று வெளியிட்டுள்ளனர்.

சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘பப்ளிக்’. ரா.பரமன் இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகர் காளி வெங்கட், நடிகை ரித்விகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு, டி. இமான் இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார்.


கே.கே.ஆர் சினிமாஸ் சார்பில் கே.கே.ரமேஷ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட்பிரபுவும் இணைந்து இன்று வெளியிட்டனர். படம் பற்றி இயக்குநர் ரா.பரமன் கூறும்போது, ‘’தமிழில் அரசியலை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அரசியல் தலைவர்களைப் பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. ஆனால், முதன்முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களைப் பற்றிய படமாக இது உருவாகி இருக்கிறது” என்றார்.