

அ.தமிழ்ச்செல்வன்
அ.தி.மு.க.சார்பாக குடிமைப்பணி தேர்வெழுதும் மாணவர்களுக்கு புத்தகத்தொகுப்பு மற்றும் கையேடுகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெறுகிறது.
சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி,எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீச்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கு இணங்க மதுரை திருநகரில் கையேடு வழங்கும் விழா இன்று மாலை நடைபெறுகிறது.
தமிழக இளைஞர்களின் எதிர்கால நலன்கருதி புதிய முன்னெடுப்பாக நமது ‘ஆற்றல்’ ஐ .ஏ.எஸ் அகாடமி- மாணவர்களுக்கான புத்தக தொகுப்பு மற்றும் கையேடுகள் வழங்கும் விழா மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இக் கூட்டத்தில் எஸ்.பி..வேலுமணி எம்.எல்.ஏ சிறப்புரையாற்ற, மாவட்ட அ.தி.மு.க செயலாளர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ, , ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ முன்னிலையில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ்,கோவை புறநகர் மாவட்டச்செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார்,மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், உசிலம்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி அ.தி.மு.க செயலாளர் வக்கீல் ரமேஷ்,திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர்முருகன்,திருப்பரங்குன்றம் மேற்கு பகுதி அ.தி.மு.க.செயலாளர் எஸ்.எம். பி. பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றியுரை நல்குகின்றனர். இக்கூட்டத்திற்கு வரவேற்பாளர்களாக டி.கெளரிசங்கள்,மணிகண்டன்,கருப்பசாமி பாண்டியன்.எம்.தமிழ்ச்செல்வன் கலந்து கொள்கின்றனர்.மேலும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், ஆர்.கே.ஜே .மாணிக்கம்,ஜி.சிங்கராஜபாண்டியன்,கே.எம்.கோபி,எ.சரவணக்குமார்,ஆர்.பாண்டியராஜன்,கே.எம்.கருப்பசாமிபாண்டியன் ஆகியோரும் வரவேற்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
இத் தகவலை தென்மண்டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தெரிவித்துள்ளார்.


