சி.பி.ஐ. மூலம் எதிர்கட்சிகளை மத்திய அரசு முடக்குகிறது டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. பிறப்பித்தற்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- பணவீக்கம் காரணமாக நாடு முழுவதும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் இந்த நேரத்தில் மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க போராட வேண்டும். ஆனால் மத்திய அரசோ காலையில் எழுந்தவுடன் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறது. இப்படிப்பட்ட நாடு எப்படி முன்னேறும். மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.