தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் தேர்வு செய்யும் நபர்களுக்கு வீடுகள் கட்ட ரூ 2.75 நிதி வழங்கப்பட்டு வருகிறது . மூன்று தவணையாக இந்த நிதி பிரித்து வழங்கப்படுகிறது. பயனாளர்கள் சிலர் தங்கள் சொந்த பணத்தையும் சேர்த்து போட்டு அரசு சொன்னபடி இல்லாமல் பெரிய வீடாக கட்டிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் அரசு விதிகளின்படி கட்டி , மொத்த பணத்தை பெற்றுக் கொண்டு புகைப்படம் எடுத்து காண்பித்து விடுகிறார்கள். ஆனால் முழுத் தொகை கிடைத்த பின்னர் அந்த வீட்டையே தங்கள் இஷ்டத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள் . இதனால் உண்மையான பயனாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் . இந்நிலையில் ராஜக்காள் பட்டி ஊராட்சி அழகாபுரியில் பயனாளர்கள் அரசை ஏமாற்றும் வகையில் இடத்தை மாற்றி வீடுகள் கட்டி வருகிறார்கள்.
ஒரு சிலர் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டுகிறார்கள் .எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இவ்வாறு முறையீடாக செயல்படும் பயனீட்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.