• Sat. Apr 20th, 2024

டுவீலருக்கும் சேர்த்து சிமெண்ட் சாலை: வைரலாகும் வீடியோ..!

Byவிஷா

Jun 29, 2022

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியைப் போலவே, வேலூர் மாநகராட்சியும் ஸ்மார்ட்சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு பல்வேறுகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வேலூர் மெயின் பஜாரில் உள்ள காளிகாம்பாள் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள சிமெண்ட்சாலை அப்பகுதி மக்களிடையே வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. என்பவர் தனது இருசக்கர வாகனத்தை; தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். அதேபோன்று நேற்று இரவும், தனது கடை முன்பு பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது. சேர்ந்து தெருவோரம் நிற்;க வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க சிவா முயற்ச்சித்துள்ளார். ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் எடுக்கமுடியவில்லை. பின்னர் போராடி உடைத்து வண்டியை மீட்டுள்ளனர்.

எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக வண்டிக்கும் சேர்த்து சாலை போட்டுள்ளது அப்பகுதி மக்களை வேதனைப்படுத்தியுள்ளது. மேலும் ஒப்பந்தகாரர்களிடம் தெரிவித்தால், அவர்கள் அலட்சியமாகப் பதில் சொல்கின்றனர் என்றும் வேதனைப்படுகின்றனர் மக்கள்.
ஒரு வேளை மனிதன் உறங்கிக்கொண்டிருந்தால் கூட அவனுக்கும் சேர்த்தே சாலை போட்டிருப்பார்கள் போல. எங்கள் பகுதியில் போடப்பட்டு வரும் சாலை சுத்தமாக தரம் இல்லாமல் கடமைக்கு போடப்பட்டு வருகிறது. தெருவில் உள்ள குப்பை, கற்கள், கட்டைகள் என எதையும் அகற்றாமல் சாலை போடுகிறார்கள் இதனால் மக்கள் பணம் தான் வீணாகிறது. இனியாவது அதிகாரிகள் இவற்றை கண்காணித்து தரமான சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. அத்துடன் இது போன்ற அலட்சியமான செயலுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *