• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

வடகாடு பிரச்சனையை சிபிசிஐடி விசாரணை..,

ByS. SRIDHAR

May 20, 2025

வடகாடு பிரச்சனையை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.

வேங்கை வேல் பிரச்சனையை அப்போதிருந்த ஆட்சியர் அதிரடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்ற பெயரில் பிரச்சனையை திசை திருப்பி விட்டார்.

வேங்கை வயல் பிரச்சனை போன்ற வடகாடு பிரச்சனையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்கூட்டியே குடிபோதையில் இந்த பிரச்சினை நடந்தது என்று வழக்கை திசை திருப்பி விட்டார். புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேச்சு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இரண்டு சமூகத்தினர் இடையே கடந்த ஐந்தாம் தேதி ஏற்பட்ட பிரச்சனையில் தலித் சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய வீடு கார் இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக சித்தரித்து கைது செய்துள்ளதை கண்டித்தும் புதுக்கோட்டையை திலகரிடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமை கை வைத்து பேசினார் அப்போது அவர் பேசுகையில்

ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் தான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆளும் கூட்டணியில் இருப்பதால் கூட்டணிக் கட்சிக்கு சலுகை வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கக் கூடாது என்பதற்காக அனுமதி மறுக்கப்படுகிறது.

வடகாட்டில் நடந்தது ஜாதிய மோதல் தான்,

ஏற்கனவே அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் பிரச்சனையில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தவறிவிட்டது, 15 வருடமாக அந்த வழக்கு நிலுவையில் உள்ளது,

வழக்கை காரணம் காட்டி பட்டியலின மக்களையும் வழிபட கூடாது என தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் தான் சமூக பதற்றம் ஏற்படுகிறது. பேச்சு வார்த்தை என்ற பெயரில் அதிகாரிகள் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

தமிழகத்தில் எந்த சேரி கொளுத்தப்பட்டாலும் அங்கு எஸ்பி , கலெக்டர் அங்கு போகமாட்டார்கள். அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் வழிபட மரபு படி வடகாடு பட்டியலின மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். மாற்று சமூக மக்களை அந்த இடத்தில் அனுமதிக்க கூடாது. அந்த கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை 24 மணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு, கைது செய்யப்பட்ட பட்டியலின இளைஞர்களை உடனே விடுவிக்க வேண்டும், அதில் 4 பேர் மாணவர்கள் என்று கூட பாராமல் போலீசார் பட்டியலின இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்,

வழக்குகளை திரும்ப பெற வேண்டும்,

இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளை உடனே அங்கிருந்து மாற்ற வேண்டும்,

அல்லது வடகாடு வழக்கை சிபிசிஐடி போன்ற புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இது போன்ற சம்பவங்கள் அங்காங்கே நடந்து வரும் நிலையில், தமிழக அரசு வருவாய்த்துறை மற்றும் காவல்த்துறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,

வேங்கைவயல் வழக்கில் பட்டியலின இளைஞர்களையே குற்றவாளிகளாக்கி விட்டனர், வேங்கைவயல் பிரச்சனை உள்ளாட்சி தேர்தல் பிரச்சனை, ஆனால் அதனை அப்படியே மாற்றிவிட்டனர்,

வேங்கைவயலில் நடந்தது தான் வடகாட்டிலும் நடக்கிறது, ஏன் என்றால் எஸ்பி முதலிலே சொல்லிவிட்டார், வடகாடு பிரச்சனை ஜாதிப் பிரச்சனை இல்லை.

காவல் துறை அதிகரிகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக கையாளவும், பாதிக்கப்பட்ட பட்டியலின பக்கம் நின்று விசாரணை நடத்தவும் காவல்த்துறையினருக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது,
இது குறித்து நான் முதல்வரிடமும் வலியு றுத்துவேன்,

சமூக நல்லிணக்கமே விடுதலை சிறுத்தைகளின் வேட்கை,

விசிகவை பொறுத்தவரையில் ஒட்டு மொத்த மாற்று சமூகங்களும் எங்களை எதிர்க்கிறது என்று நாங்கள் சொல்லவில்லை, ஒரு சிலர் அரசியல் ஆதாயத்திற்காக ஜாதி ரீதியாக பிரச்சனையை போக்கும்முன்னெடுக்கின்றனர்.

வட மாவட்டங்களில் பாமகவை போல , அதனால்தான் நாங்கள் பாமகவோடு கூட்டணியில் இடம் பெறமாட்டோம் என்று கூறுகிறோம்.

பாமகவை எதிர்பப்பதால் வன்னிய சமூக மக்களை நாங்கள் எதிர்க்கிறோம் என்று அல்ல, பாமகவை விமர்சிப்பதால் வன்னிய சமூக மக்களை நாங்கள் விமர்சிக்கிறோம் என்று அர்த்தம் அல்ல, வன்னிய சமூக மக்களுக்காகவும் தான் நாங்கள் போராடி வருகிறோம்.

https://we.tl/t-ilzCo5S2Ye