
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராங்கியம் கிராமத்தில் மரக்கால் உடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியத்தில் மரக்கால் உடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர் பாஷா தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 200 மாடுகள் 150 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசலில் கட்டவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து வந்ததே சீறிப்பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் ஆர்வத்தோடு பிடித்தனர். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

