
புதுக்கோட்டையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் வண்ணம் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பர்வேஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் தனசேகரன்
ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

சுட்டரிக்கும் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகத்தை தீர்க்கும் வண்ணம் தமிழக வெற்றிக்கழக தலைமை அறிவித்த அறிவிப்பை தொடர்ந்து இன்று இந்த தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. இந்த தண்ணீர் பந்தலில் பழங்கள் பழரசங்கள் ஐஸ்கிரீம்.மோர் குளிர்பானங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
