தாம்பரம் ஜெயபிரதீப் டிஸ்மிஸ்
தாம்பரம் மாநகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் மூன்றாவது குழு தலைவர் ஜெயபிரதீப் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் விதிமுறைகளை மீறும் மேயர் துணை மேயர் மாமன்ற தலைவர்கள் மீது 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்…
நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தை மீறின உள்ளாட்சி பிரதிநிதிகள் 4 பேர் பதவி நீக்கம்
நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தை மீறியதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் 4 பேர் பதவி நீக்கம் செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழக அரசின் அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும்…
அதிமுக பொதுச்செயலாளர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து, ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை…
டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் உள்துறை அமைச்சர் சந்தித்தது குறித்து, தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் பதிவாக வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்.., தமிழக மக்கள் நலனுக்காகவும்…
மக்களைத் திசை திருப்பும் திமுக அரசு: வானதி சீனிவாசன் எம்எல்ஏ குற்றச்சாட்டு!
மத்திய அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் ஒரு தீர்மானத்தையோ அல்லது ஏதாவது ஒரு பிரகடனத்தையோ கொண்டுவந்து மக்களை திசைத்திருப்ப திமுக அரசு முயற்சி செய்வதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த…
வக்ஃப் திருத்த மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது- மு.க.ஸ்டாலின்!
மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான, நீதிமன்றத்துக்கு முரணான தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்ஃப் சட்டத்தில் இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…
அதிமுகவில் இருப்பதற்கு ஓபிஎஸ் தகுதியில்லாதவர்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தை ஓபிஎஸ் என்று உடைத்தாரோ, அப்போதே, அவர் கட்சியில் இருப்பதற்கான தகுதியில்லாதவர் ஆகிவிட்டார். அதனடிப்படையில், அவரை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில், அதிமுக…
‘இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா’ – ஆரம்பித்து வைத்த ஆர்.பி. உதயகுமார்!
இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டியள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு…
இது மாண்புக்கான போர்- உ.பி முதல்வர் யோகிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஆதிக்கத்தை, திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். இது வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல. நீதிக்கான, மாண்புக்கான போர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு…
அமித்ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணியில் திமுக உள்ளிட்ட…




