திடீரென உருண்டோடிய பேருந்து சக்கரம்
திருப்பூர் மாவட்டம் கள்ளகிணறு அருகே அரசு பேருந்தின் முன் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர் . நெல்லையில் இருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது திடீரென பேருந்தின் முன்பகுதி சக்கரமானது பேருந்திலிருந்து கழன்று…
மதமாற்றம் செய்வோரை தண்டிக்க மாசாணி அம்மன் கோவிலில் வழிபாடு!
திருப்பூர் மாவட்டம் சிவசேனா கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில், தமிழகத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் அவமதித்தும், இந்து விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், இந்து திருக்கோவில்கள் இடிப்பவர்கள், இந்துக்களை மதமாற்றம் செய்பவர்களை தண்டிக்க வேண்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு…
திருப்பூரில் பிடிபட்ட சிறுத்தை!
திருப்பூர், அம்மாபாளையத்தில் வெகு நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் இன்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்! இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் வெகு நாட்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த சிறுத்தை இன்று மயக்க…
திருப்பூரில் அனுமதியின்றி கலைஞர் கருணாநிதி சிலை?
திருப்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதற்கு, இன்று பதில் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுார் மாவட்டம் கைனுார் கிராமத்தில், அம்பேத்கர் சிலை வைப்பது தொடர்பான…
கர்ப்பிணியிடம் அரசு டாக்டர் வசூல் வேட்டை: பணத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்ட கலெக்டர்!
‘கர்ப்பிணியிடம் சிகிச்சைக்காக வசூலித்த, 37 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை, அரசு பெண் டாக்டர் திருப்பி வழங்க வேண்டும்’ என திருப்பூர் கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காரத்தொழுவை சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி, செப்., 23ல் உடுமலை அரசு…
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வடநாட்டு இளைஞர்கள் கைது..!
திருப்பூர் மாநகரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட செவந்தபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இவ்விசாரணையில்…
சுங்கச்சாவடியை அகற்றகோரும் கோவை மக்களவை உறுப்பினர் நடராஜன்
திருப்பூர் தாராபுரம் சாலையில் விதிமீறி அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை சுங்கச் சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியிடம் நேரில் வலியுறுத்தி உள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி – திருப்பூர்…
உடுமலை அருகே தாய், தந்தைக்கு கோயில் கட்டிய இளைஞர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் தாய் தந்தை மீதான அதீத அன்பால் அவர்களுக்கு கோயில் கட்டி ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடத்தி வருவது வியப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவை புளியங்குளத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.…
திருப்பூரில் அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா
திருப்பூரில் அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் சார்பில் டாக்டர் ஆ. ப. ஜெ அப்துல் கலாமின் 90 வது பிறந்த வருடத்தை முன்னிட்டு தனித்திறனோடு சாதனை படைத்த 90 மாணவ, மாணவிகளுக்கு அப்துல் கலாம் இளம் சாதனையாளர் விருது 2021…
திருப்பூரில் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து அர்ஜீன் சம்பத் பேட்டி..!
இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த அர்ஜின் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில். ஆங்கில புத்தாண்டு, பொங்கல் மற்றும் கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களை கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்வோம். தை ஒன்று அன்று பொங்கல் பரிசாக 5 ஆயிரம் வழங்க வேண்டும்.…