• Mon. Jun 17th, 2024

சர்வதேச அளவிலான யோகா போட்டியில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்த பல்லடத்தை சேர்ந்த 12 வயது சிறுமி…

ByS.Navinsanjai

May 26, 2024

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் பல்லடத்தை சேர்ந்த 12 வயது சிறுமி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் அனிதா தம்பதியர்.இவர்களுக்கு வியாஷினி 12 என்ற மகளும் சஷ்வின் என்ற சிறப்பு குழந்தையும் (special child)உள்ளனர். இந்நிலையில் சிறுமி வியாஷினி சிறுவயதிலிருந்தே யோகா,நடனம்,ஓவியம்,உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கி வந்துள்ளார். இதனிடையே யோகா கலையின் மீது ஆர்வம் கொண்டதன் காரணமாக சிறுமி வியாஷினியின் பெற்றோர் அவரை காளீஸ்வரி என்ற யோகா ஆசிரியரிடம் பயிற்சிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. யோக ஆசிரியர் காளீஸ்வரியின் பயிற்சியில் சேர்ந்து கொண்டு யோகாசனத்தை கற்றுத் தேர்ந்து கொண்ட சிறுமி வியாஷினி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வந்த யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வந்துள்ளார் இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்து கொண்ட சிறுமி வியாஷினி இரண்டாம் பரிசு பெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடமான வெள்ளிப் பரிசை பெற்று பல்லடததிற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில் தங்களின் குழந்தை சிறு வயதிலிருந்தே விளையாட்டு யோகா உள்ளிட்ட கலைகளில் மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும் அதனை தொடர்ந்து தாங்கள் அவற்றுக்கு பயிற்சி கொடுப்பதற்காக அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்த அவர் தங்களின் பிள்ளை வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தருவாள் எனவும் அவர்கள் பெருமிதம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து யோகா பயிற்சி அளித்த யோகா ஆசிரியர் காளீஸ்வரி கூறுகையில் பிள்ளைகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மேம்பட இது போன்ற கலைகள் முக்கியமாக உள்ளதாகவும் யோகா கலையை அரசு பள்ளிகளில் கற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *