கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு பயணம்..,
கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், ரோட்டரி சங்கத்தின் தலைமையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபெறும் விழிப்புணர்வு ஊர்தி பயணம் இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பயணத்தினை கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார், மற்றும் வருங்கால ரோட்டரி…
திருமாவளவன் இன்று நாகர்கோவிலுக்கு வருகை..,
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கடற்கரையில் நேற்று மாலை(மே_12) நடந்த சித்ரா பௌர்ணமி விழாவில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று நாகர்கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும்,…
குழித்துறை நீதிமன்றம்ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.
நாகர்கோவில் அருகே வட்டக்கரை பகுதியை சேர்ந்த குழித்துறை நீதிமன்ற ஊழியர் நாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவரது தந்தைக்கு எனது இந்த முடிவுக்கு காரணமானவர் யார் என்பது குறித்து அனுப்பிய ஆடியோவில், நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் துன்புறுத்தியதாக…
கன்னியாகுமரி சித்ரா பவுர்ணமி விழா..,
கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் நிலாச்சோறு விருந்து குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் துவக்கி வைத்தார். சித்ரா பவுர்ணமி என்பது தமிழ் புத்தாண்டிற்குப் பிறகு வரும் முதல் பௌர்ணமியாகும், இது ஒரு முக்கிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், முருகப் பெருமான் திருக்கோயிலில்…
தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி தொடக்கம்…
கன்னியாகுமரியில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. கன்னியாகுமரி பெரியநாயகி தெரு பகுதியில் கடலின் சீற்றம் மற்றும் மீன் பிடிக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு இல்லாத நிலை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதனால், அப்பகுதியைச்…
திமுகவின் 4 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்..,
குமரி கிழக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. திமுகவின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் தலைமைக்கழகத்தின் சார்பில்.தலைமை கழக பேச்சாளர் அன்பழகன், குமரி பிரபாகரன். வழக்கறிஞர் பாலஜனாதிபதி, குமரி ஸ்டிபன், பார்த்தசாரதி,…
புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் 10_ம் திருவிழா, ஆடம்பர தேர் பவனி…
குமரி மாவட்டம் இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் தேவாலயம் தேர்த்திருவிழாவின் 10 வது திருநாளான நேற்று (மே_11) மூன்று தேர்களின் பவனி நடைபெற்றது. இந்த விழாவில் பல்சமய பக்த்தர்கள் பங்கேற்று திருத்தேரின் வடம் பிடித்து இழுத்ததுடன் கூடி நின்ற மக்கள்…
மனோதங்கராஜ்க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து..,
பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜ்யை தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.வை.தினகரன் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். உடன் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெயசிங், மாநிலச் செயலாளர் ராமதாஸ், மாநில கொள்கை பரப்பு செயலாளர்…
புனித இடைவிடா சகாய அன்ன திருத்தல திருவிழா..,
குமரி மாவட்டம் சகாயபுரம் பகுதியில் கோவில் கொண்டுள்ள இறை இயேசுவின் தாய்இடைவிடா சகாய அன்னையின் தேவாலயம் அனைத்து மத மக்களும் வழி பட்டு அவர்கள் வேண்டுதல் நிறைவேறியதின் நன்றி காணிக்கை செலுத்து.ஒவ்வொரு புதன்கிழமையும், காலை முதல் முன் இரவு வரை சகாய…
தேச நலன் காக்க சிறப்பு பிரார்த்தனை..,
நாகர்கோவில், ஒழுகினசேரி அருள்மிகு ஸ்ரீ வள்ளியாமடத்து இசக்கியம்மன் திருக்கோயில் 21-வது வருடாபிஷேக விழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார் இவ்விழாவில் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், கழக சிறுபான்மையினர்…





