• Sat. Apr 27th, 2024

கன்னியாகுமரியில் வேளாண் சட்டத்தை பாராளுமன்ற மூலமாக திரும்பப் பெற கோரி ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கேட்டு டெல்லியில் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் மற்றும் மக்கள் விரோத பாஜாக அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தியது. போராட்டத்தின் முதலாவது ஆண்டு தினத்தை நினைவு கூறும் வகையிலும், வாய்மொழியாக ரத்து செய்தோம் என்று கூறுவதை விட 3 வேளாண் சட்டத்தை பாராளுமன்ற மூலமாக திரும்பப் பெற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையம் அலுவலகம் முன்பு இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி தொழிற்சங்கங்கள் இணைந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாய்மொழியாக ரத்து செய்தோம் என்று கூறுவதை விட 3 வேளாண் சட்டத்தை பாராளுமன்ற மூலமாக திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெட்ரோல் பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும், தொழிலாளர்களின் 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை இருநூறு நாளாக உயர்த்தி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,

வங்கிகள் பொது காப்பீடு நிறுவனங்கள் ரயில் விமானம் ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலைகள் அதையும் தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும், மாநில அரசால் நடத்தப்படும் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு நல வாரியங்களை சீரழிக்கும் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதை நிறுத்த வேண்டும், முறைசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாகுவதை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *