கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளதை தொடர்ந்து, நாகர்கோவிலில் மணிமேடை சந்திப்பில் உள்ள செல்போன் கடையில் புதிய செல்போன் வாங்கினால் கிலோ கணக்கில் தக்காளி இலவசம் என்ற அறிவிப்போடு தொடங்கிய விற்பனை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வர்த்தக நிறுவனங்கள் செல்போன், துணிமணிகள், வாட்ச் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை விற்பனையாளர்கள் கையாண்டு வருவது வழக்கம். சில நேரங்களில் நூதன முறையில் வாடிக்கையாளர்களை அணுகும் வழக்கமாக உள்ளது.
ஒரு பொருள் வாங்கினால் மேலும் ஒன்று இலவசம், விசேச மற்றும் பண்டிகை காலங்களில் குழுக்கள் முறையில் பரிசுகள் வழங்கல் என்ற அறிவிப்பு காலங்காலமாக இருந்து வருகிறது. இதனிடையே தற்போது தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு கிலோ 100 ரூபாயை தாண்டி உள்ளதால், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள செல்போன் கடை ஒன்று புதிய செல்போன் வாங்கினால் கிலோ கணக்கில் தக்காளி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்போடு இந்த விற்பனையை தொடங்கி உள்ளனர் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று உள்ளது.