கன்னியாகுமரி மாவட்ட மழை, வெள்ளம் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் குழுவினர் கன்னியாகுமரிக்கு இன்று பிற்பகல் வருகைதந்தனர். முதலில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள வெள்ள சேத புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட வரலாறு காணாத கண மழையில் ஆறுகள், குளங்கள், கால்வாய்களில் காட்டாட்று வெள்ள பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டுக்கபட்டது. சாலைகள் உருக்குலைந்தது, மலை கிராமங்கள் துண்டிக்கபட்டது பாலங்கள் சேதமானது. விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாழானது மாவட்டத்தில் எங்கும் இயல்பு நிலை திரும்பவில்லை. செங்கல், உப்பு, ரப்பர் உற்பத்திகள் முடங்கியது.

இந்நிலையில் மத்திய அதிகாரிகள் குழுவினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ள சேதங்களை பார்வையிட தமிழகத்திற்கு வந்ததில் ஒரு குழு பிற்பகல் கன்னியாகுமரி வந்து சேர்ந்தனர். தமிழகத்திற்கு வெள்ள சேதங்களை பார்வையிட வந்ததில் குமரி மாவட்டத்திற்க்கு வந்தவர்கள், ஒன்றிய குழுவில் ஒரு பகுதியினா். ஒன்றிய நிதித்துறை ஆலோசகா் ஆா்.பி.கவுல், ஒன்றிய நீா்வள ஆணையத்தின் இயக்குநா் ஆா்.தங்கமணி, ஒன்றிய எரிசக்தி துறை உதவி இயக்குநா் திருமதி.பாவ்யா பாண்டே, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியேருடன் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் அதிகாரிகள் உடன் சென்று வெள்ள சேத பகுதிகளை காண்பித்து வருகின்றனர்.
முதலில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள வெள்ள சேத புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து வடக்கு தாமரைகுளம் பகுதியில் உள்ள சேதமடைந்த பிள்ளைபெத்தான் தடுப்பனையை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து தக்கலை அருகே குமராகோவில் பகுதியில் உள்ள கால்வாய் உடைப்பு, சாலை சேதம், ஆகியவற்றை பார்வைட்டு பின் பேயன்குழி – வைக்கலூர் பகுதிகளில் சேதமான விளை நிலங்கள் பார்வையிட்டபின் நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூர், திருப்பதிசாரம் ஆகிய இடங்களில் விளை நிலங்கள், சாலை சேதங்களை பார்வையிட உள்ளனர்.