தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து 3000 கன அடி நீர் திறப்பு. ஆர்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி.

குமரியில் இரு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 1000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கோதையாற்றிலும், தாமிர பணி ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுள்ளதால் திற்பரப்பு அருவியிலும் நீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது. சிறுவர் நீச்சல் குளம் உட்பட நீர் மூழ்கடித்து செல்கிறது. தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.