• Sat. Apr 20th, 2024

தமிழக கோயில்களில் மாதம் ஒருமுறை உளவாரப்பணிகள் மேற்கொள்ளப்படும்…

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாதம் ஒருமுறை உளவாரப் பணிகள் நடைபெறும் – கோவில்களில் சிறுவர்கள் பூஜை செய்வது குறித்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த வழக்கில் முடிந்த பின்னர் தமிழக முதல்வரின் ஒப்புதலோடு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சுசீந்திரம் கோவிலில் மூலிகை ஓவியங்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொள்கிறார் முன்னதாக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் உள்ள புராதன மூலிகை ஓவியங்களை பார்வையிட்டு பின்னர் சாமி தரிசனத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில்…


சுமார் ஒன்பது ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த மூலிகை ஓவியங்களை தற்போது சீரமைத்துள்ளோம் இது தொடர்பான ஆய்வறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு இத்திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. அதற்குப் பிறகு தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது மண்டல குழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது.

பின்னர் மாநிலக்குழு அதன் பின்பு நீதிமன்ற குழு என அனைத்து ஆய்வு மற்றும் அறிக்கைகள் கிடைத்த பின்பு கூடிய விரைவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாதம் ஒருமுறை உளவாரப் பணிகள் நடைபெறும். கோவில்களில் சிறுவர்கள் பூஜை செய்வது குறித்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த வழக்கு முடிந்த பின்னர் தமிழக முதல்வரின் ஒப்புதலோடு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *