கடலூர் புவனகிரியில் விறுவிறுப்பாகத் தொடங்கிய மறுவாக்குப்பதிவு..!
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளில் காலியாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக…
கட்டிட விபத்தில் உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம்
கடலூர் அருகே எஸ். புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் பழமைவாய்ந்த இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் கட்டிடம் மோசமடைந்து நிலையில் காணப்பட்டது. இன்று இந்த வீடுகளுக்கு அருகில் எஸ்.புதூரை சேர்ந்த சிறுவர்கள் வீரசேகர், சுதீஸ்குமார் புவனேஸ்வரன் மற்றும்…
கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு..
கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் பழைய கட்டிடம் இருந்தது. இந்த கட்டடம் அருகே சிறுவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
விருத்தாச்சலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசாமிக்கு தெப்பத் திருநாள்…
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசாமி தெய்வானை வள்ளி தெப்பத் திருநாள் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவின் இறுதியாக சுப்ரமணியசாமி வள்ளி, தெய்வானை தெப்பத் தேரில் சமேதராக எழுந்தருளி தெப்பத்தில் மிதந்தபடி வலம் வந்து அருள்பாலிப்பரா. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா…
விருத்தாச்சலம் தாலுகா அலுவலக வளாக குப்பை மேட்டில் எரிந்த நிலையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள்..!
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா அலுவலக வளாக குப்பைமேட்டில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் எரிந்த நிலையில் கிடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைக்கான (தேர்தல் பிரிவு) பிரிவு இயங்கி…
மரத்தின் மீது கார் மோதி விபத்து- கடலூர் அருகே சோகம்
கடலூர் சிப்காட் அருகே இன்று அதிகாலை மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த தம்பதி உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமு (67). இவரது மனைவி லலிதா (61). இவர்கள் இருவரும் நேற்றிரவு…
கடலூர் மாவட்ட அதிமமுக கழக துணைச்செயலாளர் நியமனம்
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பதிய நிர்வாகிகளை தலைமைக் கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் மற்றும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் கடலூர் மாவட்டக் கழகத் துணைச் செயலாளராக V.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு…
முந்திரி ஆலை கொலை வழக்கில் திமுக எம்.பி ரமேஷுக்கு ஜாமீன்
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக எம்.பி. ரமேஷ், கடந்த அக்டோபர் 11ம் தேதி…
கடலூரில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட ஸ்டாலின்
கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாகப் பெய்த கடும் மழையின் காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கின. தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த…
வடலூர் சந்தை – ரூ.3 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்…
கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெறும் சனிக்கிழமை வாரச் சந்தை மிகவும் பிரபலமானது. ஆடு, மாடு, கோழி, முயல் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்தும் மொத்த வியாபாரிகளும், சில்லறை விற்பனையாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், தீபாவளியை…








