
கடலூர் அருகே எஸ். புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் பழமைவாய்ந்த இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் கட்டிடம் மோசமடைந்து நிலையில் காணப்பட்டது.
இன்று இந்த வீடுகளுக்கு அருகில் எஸ்.புதூரை சேர்ந்த சிறுவர்கள் வீரசேகர், சுதீஸ்குமார் புவனேஸ்வரன் மற்றும் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிடம் இடிந்து விழுந்தது.இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வீரசேகர், சுதீஷ்குமார் 2 பேரும் உயிரிழந்தனர். புவனேஸ்வரனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
