

கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் பழைய கட்டிடம் இருந்தது. இந்த கட்டடம் அருகே சிறுவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி மேலும் சிறுவர்கள் சிக்கியுள்ளனரா? என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விபத்து நடந்த கட்டிடம் இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட பழைய குடியிருப்பாகும். யாரும் வசிக்காத நிலையில் கட்டிடங்கள் இருந்த நிலையில் தற்போது இடிந்து விழுந்துள்ளது.
மக்கள் பல முறை அறிவுறுத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கமால் இந்த பழைய கட்டிடத்தை சீரமைக்கமால் விட்டதால் இப்படி 2 சிறுவர்களின் உயிர் அநியாயமாக போனதாக அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர்.இதற்கு இனி ஆளும் அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.