• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • திருக்குறள்:

திருக்குறள்:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை. பொருள்:பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

தினம் ஒரு திருக்குறள்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால். பொருள்: (மு.வ) மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

தினம் ஒரு திருக்குறள்!.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. பொருள்: (மு.வ) உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

தினம் ஒரு திருக்குறள்:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. பொருள்மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

தினம் ஒரு திருக்குறள்:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார். பொருள்: (மு.வ)இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

தினம் ஒரு திருக்குறள்:

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை பொருள்: (மு.வ)

தினம் ஒரு திருக்குறள்:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது பொருள்: (மு.வ) அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.

தினம் ஒரு திருக்குறள்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது. பொருள்: (மு.வ) தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

தினம் ஒரு திருக்குறள்:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார் பொருள்:மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளின் வாயிலாக பிறக்கும் தீய ஆசைகளை அழித்து இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்

தினம் ஒரு திருக்குறள்:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு பொருள்:கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை