ரோட்டரி மாவட்டம் 3000_ த்தின் கனவுத் திட்டம் -3 பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!! என்ற தலைப்பில் கழிவுப் பிளாஸ்டிக் சேகரிக்கும் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சங்கத் தலைவர் S.அப்துல் ரகுமான் என்ற சேட் தலைமையில் நடைபெற்றது.

வருகை தந்த அனைவரையும் சங்கப் பொருளாளர் கண.மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் S.கதிரேசன், துணை ஆளுநர் சித்ராதேவி ராமதாஸ், புதுகை வெற்றி ரோட்டரி சங்கத் தலைவர் A.சோமசுந்தரம், மேனாள் தலைவர் S.பார்த்திபன், சானிட்டரி ஆய்வாளர் பாஸ்கரன், துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன், பொறியாளர் M.கலியகுமார், முன்னிலை வைத்தனர்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் M.காந்திராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் A.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பிளாஸ்டிக் சேகரிக்கும் பெட்டிகளை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் டாக்டர் N.சேதுராசன், M.பாலமுருகன், J.ஜான் கென்னடி, ராஜேந்திரன், சரவணன், நமநாதன், M.சையது இப்ராஹிம் புதுகை வெற்றி ரோட்டரி சங்க செயலாளர் SM.அண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர்களாக மேனாள் தலைவர்கள் R.சிவக்குமார் குட்லக் AR.முகமது அப்துல்லா செயல்பட்டனர் நிறைவாக செயலாளர் K.மணிகண்டன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.









