• Fri. Mar 29th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 467

குறள் 467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு பொருள் (மு. வ) செய்யத்‌ தகுந்த செயலையும்‌ வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்‌. துணிந்தபின்‌ எண்ணிப்‌ பார்க்கலாம்‌ என்பது குற்றமாகும்‌.

குறள் 466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும் பொருள் (மு.வ) ஒருவன்‌ செய்யத்தகாத செயல்களைச்‌ செய்வதனால்‌ கெடுவான்‌; செய்யத்தக்க செயல்களைச்‌ செய்யாமல்‌ விடுவதனாலும்‌ கெடுவான்‌.

குறள் 465

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு பொருள் (மு.வ): செயலின்‌ வகைகளை எல்லாம்‌ முற்ற எண்ணாமல்‌ செய்யத்‌ தொடங்குதல்‌ பகைவரை வளரும்‌ பாத்தியில்‌ நிலைபெறச்‌ செய்வதொரு வழியாகும்‌.

குறள் 464

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர் பொருள் (மு.வ) இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர்‌ ( இன்ன ஊதியம்‌ பயக்கும்‌ என்னும்‌) தெளிவு இல்லாத செயலைத்‌ தொடங்கமாட்டார்‌.

குறள் 463

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார் பொருள்(மு.வ) பின்‌ விளையும்‌ ஊதியத்தைக்‌ கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக்‌ காரணமான செயலை அறிவுடையவர்‌ மேற்கொள்ளமாட்டார்‌.

குறள் 462

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல பொருள்(மு.வ) ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன்‌ (செயலைப்பற்றி) நன்றாகத்‌ தேர்ந்து, தாமும்‌ எண்ணிப்‌ பார்த்துச்‌ செய்கின்றவர்க்கு அரிய பொருள்‌ ஒன்றும்‌ இல்லை.

குறள் 461

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல் பொருள் (மு.வ) (ஒரு செயலைத்‌ தொடங்குமுன்‌) அதனால்‌ அழிவதையும்‌, அழிந்தபின்‌ ஆவதையும்‌, பின்பு உண்டாகும்‌ ஊதியத்தையும்‌ ஆராய்ந்து செய்ய வேண்டும்‌.

குறள் 460

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல் பொருள் (மு.வ) நல்ல இனத்தைவிடச்‌ சிறந்ததாகிய துணையும்‌ உலகத்தில்‌ இல்லை; தீய இனத்தைவிடத்‌ துன்பப்படுத்தும்‌ பகையும்‌ இல்லை.

குறள் 460

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல் பொருள் (மு.வ) நல்ல இனத்தைவிடச்‌ சிறந்ததாகிய துணையும்‌ உலகத்தில்‌ இல்லை; தீய இனத்தைவிடத்‌ துன்பப்படுத்தும்‌ பகையும்‌ இல்லை.

குறள் 459

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்இனநலத்தின் ஏமாப் புடைத்து பொருள் (மு.வ) மனத்தின்‌ நன்மையால்‌ மறுமை இன்பம்‌ உண்டாகும்‌; அதுவும்‌ இனத்தின்‌ நன்மையால்‌ மேலும்‌ சிறப்புடையதாகும்‌.