• Mon. Apr 29th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 494:

குறள் 494:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின். பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

குறள் 493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின் பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து தம்மைக்‌ காத்துக்கொண்டு பகைவரிடத்திற்‌ சென்று தம்‌ செயலைச்‌ செய்தால்‌, வலிமை இல்லாதவரும்‌ வலிமை உடையவராய்‌ வெல்வர்‌.

குறள் 493:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின் பொருள் (மு.வ): தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்.

குறள் 492

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும் பொருள் (மு.வ): மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும்‌ அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப்‌ பயன்களையும்‌ கொடுக்கும்‌.

குறள் 491

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது பொருள்(மு.வ): முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக்‌ கண்டபின்‌ அல்லாமல்‌ எச்‌ செயலையும்‌ தொடங்கக்‌ கூடாது; பகைவரை இகழவும்‌ கூடாது.

குறள் 490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து பொருள் (மு.வ): பொறுத்திருக்கும்‌ காலத்தில்‌ கொக்குப்போல்‌ அமைதியா இருக்கவேண்டும்‌; காலம்‌ வாய்த்தபோது அதன்‌ குத்துப்‌ போல்‌ தவறாமல்‌ செய்து முடிக்கவேண்டும்‌.

குறள் 489

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல் பொருள் (மு.வ): கிடைத்தற்கரிய காலம்‌ வந்து வாய்க்குமானால்‌, அந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச்‌ செய்யவேண்டும்‌.

குறள் 488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை பொருள்(மு.வ): பகைவரைக்‌ கண்டால்‌ பொறுத்துச்‌ செல்ல வேண்டும்‌; அப்‌ பகைவர்க்கு முடிவுகாலம்‌ வந்தபோது அவருடைய தலைகீழே விழும்‌.

குறள் 487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர் பொருள்(மு .வ): அறிவுடையவர்‌, (பகைவர்‌ தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில்‌ சினம்‌ கொள்ளமாட்டார்‌. வெல்வதற்கு ஏற்ற காலம்‌ பார்த்து அகத்தில்‌ சினம்‌ கொள்வர்‌.

குறள் 486

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து பொருள் ( மு.வ): ஊக்கம்‌ மிகுந்தவன்‌ (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல்‌, போர்‌ செய்யும்‌ ஆட்டுக்கடா தன்‌ பகையைத்‌ தாக்குவதற்காகப்‌ பின்னே கால்வாங்குதலைப்‌ போன்றது.