• Fri. Apr 19th, 2024

அழகு குறிப்பு

  • Home
  • முடி வறட்சி நீங்க

முடி வறட்சி நீங்க

முடி அதிக வறட்சியுடன் இருந்தால் பால் இரண்டு டீஸ்ப்பூன், தயிர் ஒரு டீஸ்ப்பூன், கலந்து தலைமுழுவதும் தேய்த்து ஹேர் கேப் அணிந்து கொள்ளுங்கள். பின்னர் 40 நிமிடங்கள் கழித்து தலைக்குளித்தால் முடி வறட்சி நீங்கி விடும்.

முகத்தின் நிறத்தை அதிகரிக்க

மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

முக சுருக்கம் மறைய

தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

தலைமுடி நுனிப் பிளவு குறைய

வெந்தயம் 2 டீஸ்பூன், துவரம் பருப்பு1ஃ2 டீஸ்பூன், கொட்டை நீக்கிய 3 புங்கங்காயை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அரைத்துத் தலையில் தடவி, தலை முடியை அலச, நுனிப் பிளவு, கூந்தல் உடைதல் குறையும்.

நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்க

தேங்காய் எணணெயைச் சூடு செய்து, அதில் கற்பூரத்தை நொறுக்கிப் போட்டுப் புகையவிடவும். சூடு ஆறும் முன்பு, பஞ்சால் தொட்டுத் தலையில் மயிர் கால்களில் படும்படி தடவ நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்கும். முடி உதிர்வதும் நிற்க்கும்.

வறண்டுபோன கழுத்து பளிச்சிட

தர்ப்பூசணி பழச்சாறுடன் பயத்த மாவைக் குழைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து இந்தப் பேஸ்ட்டை எடுத்துக் கழுத்தில் தடவி வர, வெயிலில் வறண்டுபோன கழுத்து பளிச்சிடும்.

கழுத்தைப் பராமரிக்க

ஒரு ஸ்பூன் வெங்காயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும்.

முகம் பொலிவு பெற

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

முடி உதிர்வதை தடுக்க

இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

நகங்கள் பளபளக்க

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு…