• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் எச்சரிக்கை..,

Byமுகமதி

Jul 21, 2026

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
விக்ஸித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் VIKSIT BHARAT – GUARANTEE FOR ROZGAR AND AJEEVIKA MISSION (GRAMIN) VB–G RAM G என்பது முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய சட்டப்பூர்வ வேலைவாய்ப்புத் திட்டமாகும். ஜூலை 1, 2026 முதல் நாடு முழுமையாக அமலுக்கு வந்துள்ள இத்திட்டம், கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்களாக இருந்த வேலைவாய்ப்பை 125 நாட்களாக உயர்த்தியுள்ளது.

இதனால் நாடு முழுவதும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நோக்கில் செயல்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

VB–G RAM G திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய குளங்களை வெட்டுவதற்கு இடம் தேர்வு செய்ய அலுவலர்களை அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக இருக்கும் நிலையில் மன்னர் காலத்திலேயே சங்கிலி தொடர் போன்ற குளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்பொழுது பல்வேறு குளங்கள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிரமிப்பால் அழிக்கப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக குளங்களை வெட்டுவதற்கு இடம் தேர்வு செய்வது என்பது திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நோக்கில் மாவட்டம் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே இருந்த குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாவட்டத்தில் முழுவதும் இருக்கும் குளங்களில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்ற நீதிமன்றங்களுக்கு மக்கள் சென்று மக்கள் தீர்ப்பு வாங்கி வர வேண்டிய நிலையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள குளங்களை காக்க இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அதேபோல் குளங்களில் உள்ள ஆக்கிரமப்புகளை எடுப்பதற்கும் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் திராணியற்று மாவட்ட நிர்வாகம் உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையே பின்பற்றி மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் நிர்வாக ரீதியாக குளங்களில் உள்ள ஆக்கிரமப்புகளை எடுப்பதற்கு தடையாக இருப்பது யார் என்பது குறித்து பொதுமக்களிடையே கேள்வி எழும்பி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கிராமப்புற மக்களின் ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக 100 நாள் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி அதற்கான நிதியையும் விடிவித்து 15 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் எந்த ஒரு யூனியன் பகுதிகளிலும் இதுவரை பணிகள் வழங்கப்படாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளிடம் திட்டம் குறித்து கேட்டால் மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று அதிர்ச்சியை தருகின்ற விதமாக பதிலை தருகின்றனர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக VB–G RAM G 125 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இருக்கின்ற குளங்களைக் காக்க தவறிய மாவட்ட நிர்வாகம் புதிய குளங்களை வெட்டுகிறேன் என்று மக்களை ஏமாற்றி வருவது தெரிகிறது புதிய குளங்களை வெட்டுவதற்கு மாவட்டத்தில் இடம் இல்லாத நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குளங்களையாவது கணக்கிட்டு அதில் உள்ள ஆக்கிரப்புகளை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வரத்து வாரிகளை தூர் வாருவதற்கும் பழைய குளங்களை கண்மாய்களை ஆளப்படுத்தவாது இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து இந்த திட்டத்தை மாவட்டத்தில் செயல்படுத்த தவறினால் மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.