எண்ணெய் பிசுக்கு நீங்க
ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி, ஒரு டீஸ்பூன் சந்தன பொடி மற்றும் பன்னீருடன் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட் கெட்டியாகவும் இருக்க கூடாது, நீராகவும் இருக்க கூடாது. அதனால் அதற்கேற்ப அளவில் பன்னீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி…
பாத சுருக்கம் நீங்க
காபிப் பொடி சிறந்த கிளென்ஸர் ஆகும். அதனை கொண்டு வாரம் ஒருமுறை பாதங்களில் தேய்த்து கழுவினால் பாதம் சுருக்கமின்றி மிருதுவாகும்
வெயிலினால் ஏற்பட்ட கருமை மறைய
மோர் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து, நெற்றியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்.
நெற்றி கருமை நீங்க
இளநீர் மற்றும் சந்தன பவுடரை சரிபாதியாக எடுத்து நெற்றியில் தடவினால், நெற்றியில் உள்ள கருமை அகன்றுவிடும். இது ஒரு சிறந்த முறையாகும். இதனை வாரத்தில் 3 அல்லது 4 முறை செய்யலாம்.
புண் குணமாக
தோடு, மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்பட்டால், பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.
கை மற்றும் கால்களில் உள்ள கருமை அகல
தயிருடன் கடலை மாவு, வெள்ளரிக்காய் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால் கருமைகள் அகலும்.
முழங்கையில் உள்ள கருமை மறைய:
சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை சரிசமமாக எடுத்து, அதனை பேஸ்ட் போல் கலந்து, முழங்கையில் தடவி 5 நிமிடம் தேய்த்து, ஊற வைத்து பின் மென்மையான சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இதன் மூலம் முழங்கையில் உள்ள கருமை மறையும்.
முகச்சுருக்கம் மறைய:
தினமும் பாலுடன் 1ஃ2 துண்டு வாழைப்பழத்தைச் சேர்த்து பேஸ்டு போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முக சுருக்கங்கள் மறைந்து விடும்.
முகம் பளிச்சிட:
வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வேப்பிலை, வெள்ளிரி அரைத்த கலவையுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து…
வசிகரிக்கும் அழகு பெற
பப்பாளி பழ சாறை, முகத்திற்கு மாஸ்க் போல் போட்டுக்கொள்ளலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.