• Fri. Apr 26th, 2024

அழகு குறிப்பு

  • Home
  • தலைமுடி அடர்த்தியாக வளர

தலைமுடி அடர்த்தியாக வளர

ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

முகம் பளிச்சென்று இருக்க:

எண்ணெய் வழியும் சருமத்திற்கு மோரில் பஞ்சை நனைத்து முகம், கழுத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

முகத்தில் மேக்கப் கலையாமல் இருக்க

முகத்துக்கு மேக்கப் போடுவதற்குமுன் லேசாக முகம் முழுவதும் பன்னீரைத் தடவினால், சருமம் மென்மையாக இருக்கும். நீண்ட நேரம் மேக்கப் கலையாமலும் இருக்கும்.

முகம் பட்டுப்போன்று மின்ன

தக்காளியை அரைத்து அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டுக் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகம் பட்டுப்போன்று மின்னும்.

கைகள் இளமையாக

பால், எலுமிச்சை சாறு, தேன் – தலா 1 ஸ்பூன் முதலில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாலை சேர்த்து கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகள் இளமையாக இருக்கும்.

சரும வறட்சி நீங்க

கேரட்டை துருவி, அதை சருமம் அதிகம் வறண்டு போகும் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், அதில் உள்ள வைட்டமின் ஏ, குளிர்கால சரும பிரச்சனைகளைப் போக்கும்.

கைகள் பட்டுபோன்று மென்மையாக இருக்க

ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கைகளில் தடவினால் கைகள் பட்டு போன்று மென்மையாக இருக்கும். மேலும், உங்களின் கைகளை அழகாகவும் மாற்றும்.

கண்களைச் சுற்றி கருவளையம் நீங்க:

பிளாக் டீ தயாரித்து வைத்துக் கொண்டு, அது குளிர்ந்ததும், அதில் பஞ்சை நனைத்துப் பிழிந்து கண்களின் மேல் வைக்க வேண்டும் அல்லது புதினா சாற்றை கண்களைச் சுற்றி தடவி வர, கண்களைச் சுற்றிய கருவளையங்கள் நாளடைவில் மறையும்.

முகப்பரு நீங்க

முதலில் 2 டீஸ்பூன் முல்தானி மட்டியை எடுத்து கொண்டு பின் அவற்றுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் சந்தன தூள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பின், இவற்றுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசவும்.…

முகம் பளபளக்க

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.