உரிய ஆவணங்கள் இருந்தும் மணல் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பறிமுதல் செய்த லாரியை விடுவிக்க கோரி தமிழ்நாடு மணல் லாரிகள் சம்மேளனம் நீதிமன்றத்தில் வாதம் உரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால் நீதிபதி நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கினர்.

தமிழ்நாடு மணல் லாரிகள் உரிமையாளர் சம்மேள தலைவர் செல்லராசா மணி செய்தியாளரிடம் கூறுகையில்,
கேரள மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான மணல் குவாரியில் இருந்து முறையான ஆவணங்களோடு 5 யூனிட் மணலை பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான லாரியில் மணல் வாங்கி வந்துள்ளார். அப்போது கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா அருகே உள்ள பெரியார் மேம்பாலம் அருகே குளித்தலை உதவி ஆய்வாளர் சரவண கிரி அந்த அனல் லாரியை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது லாரியில் மணல் இருந்ததைக் கண்ட உதவி ஆய்வாளர் சரவண கிரி ஆவணங்கள் கேட்டுள்ளார். அப்போது லாரியின் ஓட்டுனர் எடுத்து வந்த மணலுக்கு உரிய ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பித்துள்ளார்.
ஏற்றுக்கொள்ளாத உதவி ஆய்வாளர் சரவண கிரி ஓட்டுனரிடம் மாமுல் கேட்டதாக தெரிகிறது. மாமுல் தராததால் ஓட்டுநரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளார். உரிய ஆவணங்களை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினர். மேலும் உதவி ஆய்வாளர் சரவண கிரி மீது மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.