• Tue. Dec 10th, 2024

வயநாடு இடைத்தேர்தலில் கடைசி நேர பரபரப்பில் வேட்பாளர்கள்

ராகுல் காந்தி ராஜூனாமா செய்ததால் வயநாட்டில் நடக்கும் இடைத்தேர்தலில் வாக்கு பதிவு நாளை மறுநாள் (நவம்பர்_13)ல் நடக்க இருக்கும் நிலையில். விரல் விட்டு எண்ணும் அளவிலான மணித்துளிகளே இன்னும் இருக்கும் நிலையில், காங்கிரஸ் சார்பில் பிரியங்காகாந்தி போட்டியிடும் நிலையில் தொகுதி முழுவதும் அவருக்கு வாக்காளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

ராகுல் காந்தி இன்றைய கடைசிக் கட்ட பரப்புரையில் தங்கை பிரியங்காவுடன் ஈடுபட்டு இருக்கும் நிலையில், வாக்களார் கண்களுக்கு வயநாட்டை நான் நேசிக்கிறேன் (I Love Vayanad) என்னும் வாசகம் அடங்கிய “டி” சர்ட் அணிந்து ராகுல் காந்தி, தங்கை பிரியங்காவுடன் ஈடுபட்டுள்ள பரப்புரை அவர் போகும் இடமொல்லாம் வயநாடு வாக்காளர்களை ஈர்த்துள்ளது. வாகன பிரச்சாரம் நிறைவடையும் இடங்களில் எல்லாம் பிரியங்கா காந்தி சொல்லும் வார்த்தை ஜான் மீண்டும் திரிச்சி வரும் என்ற மலையாள வார்த்தை (நான் மீண்டும் வருவேன்) என்ற வார்த்தை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வயநாடு மக்களவை தொகுதியில் இஸ்லாமிய மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தாலும். இந்து, கிறிஸ்தவர்கள், மலை வாழ் மக்கள் என அனைவரின் ஒற்றை ஆதரவு பார்வை பிரியங்கா காந்தியை நோக்கி இருக்கும் நிலையில், வயநாடு மக்களின் கருத்து ராகுல் காந்தி 4_ லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். ஆனால் பிரியங்கா காந்தி 5 லட்சத்தில் இருந்து 6 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு, பாஜக வேட்பாளர்கள் ஜாமீன் இழந்தாலும் ஆச்சரியம் இல்லை என்ற கருத்து வயநாடு வாக்காளர்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கிறது.