தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை,மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு,நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்த சூழலில்

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் வில்லாணி, பெருமாள்பட்டி, நக்கலப்பட்டி, கொங்கபட்டி, தி.விலக்கு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கூடிய மிதமான மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.,
காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்த சூழலில் இந்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிழவியது.,
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.,





