• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

உடைக்கப்பட்ட சிறகு

ByA.Tamilselvan

Jun 18, 2022

அம்மணமாக சுற்றித் திரிந்தாள்
தாய்வழி சமூகத்தில்
வலியின்றி சுதந்திரமாய்.
திகிலின்றி பயணிப்பாள்


இருளும் மிரளும்
அவளின் பாதசுவடுகளுக்கு.
வனாந்திரமெங்கும் _ அவளுக்கான வழிகள் சாரை,சாரையாய் _ மனித
சிராய்ப்பின்றி
வாழ்விடம் சேர்வாள்.


தந்தைவழி சமூகத்தில்
மந்தைக் கூட்டங்கள்
சந்தையில் விற்கின்றனர்
பெண்ணைப் பொருளெனெ,
அவர்களின் சவரக்கத்திக்கும்,
உள்ளாடைக்கும் ,
விளம்பர பதுமையாக்குகின்றனர்
அவளை.


குழந்தைகளும்,
குழவிகளும்.
முகமூடியணிந்தும்
உச்சிப்பொழுதில்
நடமாட முடியவில்லை
பதட்டமின்றி
நாகரீக உலகில்.

க. பாண்டிச்செல்வி