வெள்ளைக்காரன் தந்த
இந்தியாவை
பிந்தி வந்தவன்
ஹிந்தி கற்கச் சொல்லி
மன்கிபாத் நடத்துகிறான்.
கல்லுக்குள் புகுந்த தேரையாய்
பாராளுமன்றத்தில்
நுழைந்த சீம துரை
எல்லாம் ஒரே, ஒரேவென
ஒப்பாரி வைக்கிறான்.
கைவிரல்கள் பத்தும் ஒன்னா,
நீ சாப்பிடுவது மண்ணா,
உன் மனு தர்மத்தில்
மனிதம் இருக்கா?
ஒன்றான தேசத்தை
இந்துக்கள் நாடென
துண்டாட நினைப்பதென்ன,
வக்ரத்தின் எல்லை மீறுவதென்ன !
பள்ளிக்குழந்தைகள்
குட்டப் பாவாடை அணிந்தால்
மட்டம் தட்டுவதென்ன
பர்தா அணிந்து பெண்கள் நடந்தாலும் பாய்ந்து தாக்குவதென்ன…
பரிசு நூல் வழங்கினால்
கோல் மூட்டி
பின் வாங்க கோல்அடிப்பதென்ன,
அமைச்சரானாலும்
அவர் பெயரில்
மதம் பார்த்து தேர் வடம் இழுக்க மறுப்பத்தென்ன!?
அட ஆம்பூர் பிரியாணி
திருவிழாவிற்கு
பெரிய ஆணி அடித்த சர்வாதிகாரபோக்கென்ன..
சாய் பல்லவியின்
சனநாயக கருத்துக்கு
பேயாட்டம் ஆடுவதென்ன.,
அக்னிபாத் திட்டமாம்
இளைஞர்களை குறிவைத்து
எதிர்காலத்தில் நக்கி பிழைக்கச்சொல்லும் அசிங்கமென்ன..
எட்டாண்டு சாதனையில்
எட்டுப்பாடதிட்டமாம்
ஒரே நீட்டாக
மாணாக்கர்களை
முடக்குவதென்ன,
பொங்கலுடன் வடையாக
புரோட்டவுடன் வரும் ஆம்பிலேட்டாக
ஆரம்ப கல்வியில்
சமஸ்கிருதத்தை சொருகுவதென்ன..
பார்ப்பான் மலத்தைக் கூட
பவுடர் ஆக்கி பூசிக்குவான்
நாம பரலோகம் போனாலும்
சாதியா பிரிப்பான்..
ஆமை புகுந்த வீடாக மாறுது
பாரதம்.
இந்த அமினாவாள்,
நம்மை ஜாமீன் எடுக்க ஆளின்றி சிக்க வைப்பார்க்கிறான்
இவர்கள் பிணம் திண்ணும்
கழுகுகள்
“சூ ‘ ‘சூ’ வென விரட்டினால்
போகுமா ?
நாம் இனி சும்மா இருக்கலாமா ?
கவிஞர் க.பாண்டிச்செல்வி