விருதுநகர் பிஆர்சி டிப்போ அருகில் பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை. மோப்பநாய் உதவியுடன் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர் பிஆர்சி டிப்போ அருகில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி- கீதா தம்பதியினர். கிருஷ்ணசாமி பெங்களூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அவரும் அவரது மனைவியும் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டு நேற்று நள்ளிரவில் 3.30 மணிக்கு வீட்டிற்க்கு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த போது வீடு திறந்த நிலையில் இருப்பதை பார்த்து உள்ளே சென்று பார்த்தனர். வீட்டினுள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள ஒரு டைமண்ட் மற்றும் டிவி லேப்டாப் ஆகிய பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்ண சாமி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் வந்த விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் மோப்ப நாய் ராக்கி உதவியுடனும் கைரேகை நிபுணர்களுடன் தடயங்களை வைத்து திருடர்களை தேடி வருகின்றனர். இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.