• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மானாமதுரை அருகே கார் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி.. 7 பேர் காயம்..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அதிகாலை கார் நிலைதடுமாறி கவிழ்ந்து இளம் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது இந்த விபத்து சம்பவம் நடைபெற்றது.

மானாமதுரை அருகே தெற்குச்சந்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் கோவையில் வசித்து வருகின்றனர். குடும்பத்துடன் காரில் சொந்த கிராமத்திற்கு வந்தனர். அதன் பின்னர் காரில் தெற்குசந்தனூர் கிராமத்திலிருந்து காரில் மானாமதுரை அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர். மானாமதுரை அருகே மாங்குளம் விலக்குப் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஆர்த்தி வயது (17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த பெண்கள் உள்ளிட்ட 8 பேர் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு டி.நெடுங்குளத்தை சேர்ந்த பாண்டி (45) என்பவர் உயிரிழந்தார். அதன்பின் காயமடைந்தவர்கள் மானாமதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மானாமதுரை போலீசார் விபத்துச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.