கத்தி முனையில் 27 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்
மகாராஷ்டிர மாநிலம். மும்பையில் உள்ள மன்குர்டில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 27 வயது பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுவன் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அறிக்கைகளின்படி, வீட்டு வேலை செய்யும் 27 வயது பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 17 வயது சிறுவன் வீட்டிற்குள் புகுந்து கத்தியைக் காட்டி அவளையும் அவளுடைய குழந்தைகளையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். பின் 27 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். அந்த சிறுவனை காவல்துறை கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளது.