

டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டத்தால் 29 ரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
வடஇந்தியாவில் கடந்த நில நாட்களாகவே கடும் மூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் ஏற்பட்ட பனிமூட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் எதிரே வரும் வாகனங்களைக் கூட காண முடியாத அளவுக்கு பனிமூட்டம் சாலைகளில் சூழ்ந்துள்ளது. இதனால், விமான சேவை மற்றும் ரயில் சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. இதனால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை தாமதமாகின.
டெல்லிக்கு, பல்வேறு நகரங்களில் இருந்து வந்து சேர வேண்டிய 29 ரயில்கள் இன்று காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதனை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது. இவற்றில் பத்மாவதி எக்ஸ்பிரஸ். உத்தரப்பிரதேச சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 3 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
இதேபோன்று அயோத்தி எக்ஸ்பிரஸ், காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் 2 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதனால், ரயில் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

