தி.மு.க., இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்திற்கு சென்று கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் அமைச்சரும், உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஸ், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் பிறந்த நாள் பரிசாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களின் போது எடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினின் மிக முக்கிய புகைப்படங்கள் ஆகியவற்றை இணைத்து, நாற்காலி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் அன்பில் மகேஸ் பரிசாக வழங்கி உள்ளார்.
இதுமட்டுமின்றி பல்வேறு சினிமா துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ராகுல் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.