• Thu. Apr 25th, 2024

சென்னை- மைசூரு இடையே அடுத்த வந்தே பாரத் ரெயில்

ByA.Tamilselvan

Oct 14, 2022

நவம்பர் 10 முதல் சென்னை – மைசூரு இடையே வந்த பாரத் ரயில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டிலேயே அதிக வேகமாக ஓடக்கூடிய “வந்தே பாரத்” ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. 4 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டு புதுடெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தெற்கு ரெயில்வேக்கு ஒரு வந்தே பாரத் ரெயிலை ரெயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளது. தெற்கு ரெயில்வேக்கு 16 பெட்டிகளை கொண்ட ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிவேக ரெயிலான 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் சென்னையில் இருந்து பெங்களூரு- மைசூரு மார்க்கத்தில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *