• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மக்களே உஷார் ! 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு …

By

Aug 29, 2021 , ,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலணம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை, நாமக்கல், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இனிவரும் 31ம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுன் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மணிக்கு 50கிமீ வேகத்தில் சூறைகாற்று வீசம் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.